Sunday, May 22, 2016
Massive boulders moving down at Pattiyagama in Central province of Sri Lanka
101 persons from 26 families have been displaced due to massive boulders moving down at Pattiyagama in Deltota in central province of Sri Lanka. தெல்தொட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டியகம பிரதேசத்தில் பாரிய கற்கள் நகர்வு காரணமாக 26 குடும்பங்களை சேர்ந்த 101 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தெல்தொட்ட மலைமகள் இந்து கல்லூரியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மக்களுக்கு தேவையான, உலர் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிட வசதிகள் என்பன பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த மக்களுக்கு தேவையான ஆரம்ப கட்ட வசதிகள் யாவும் பூர்த்தியாகி உள்ளதாகவும், அடுத்த கட்டமாக நிரந்தர வீடுகளுக்கு செல்ல சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் அடிக்கடி கடந்த 05 வருடங்களாக இந்த அபாய நிலைக்கு தள்ளப்பட்டு குறித்த பாடசாலையில் தங்கியிருந்து மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இதுவரை காலமும் எந்த விதமான தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை எனவும், இந்த முறையாவது உரிய தீர்வு கிடைக்கவேண்டும் எனவும் இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
subsidence in Pussellawa- Displaced 45 families
புஸ்ஸல்லாவையில் நிலம் தாழ் இறக்கம் - 45 குடும்பங்கள் இடம் பெயர்வு
உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோகம தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலம் தாழ் இறங்கியுள்ளது. இதனால் லயன் குடியிருப்பு தொகுதிகள் வெடிப்புற்ற நிலையில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள் கெலேகால கிராமத்தின் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு, பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் உலர்உணவு பொருட்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.பாதிப்புக்குள்ளான மக்கள் கருத்து தெரிவிக்கையில், “எங்களுக்கு தேவையான ஆரம்பகட்ட வசதிகள் யாவும் பூர்த்தியாகி உள்ளது, அடுத்த கட்டமாக எங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கும் தொடர்ந்து நிரந்தர வீடுகளுக்கு செல்லவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)