Sunday, May 22, 2016

Massive boulders moving down at Pattiyagama in Central province of Sri Lanka

101 persons from 26 families have been displaced due to massive boulders moving down at Pattiyagama in Deltota in central province of Sri Lanka. தெல்தொட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டியகம பிரதேசத்தில் பாரிய கற்கள் நகர்வு காரணமாக 26 குடும்பங்களை சேர்ந்த 101 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தெல்தொட்ட மலைமகள் இந்து கல்லூரியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மக்களுக்கு தேவையான, உலர் உணவுப் பொருட்கள் மற்றும் தங்குமிட வசதிகள் என்பன பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த மக்களுக்கு தேவையான ஆரம்ப கட்ட வசதிகள் யாவும் பூர்த்தியாகி உள்ளதாகவும், அடுத்த கட்டமாக நிரந்தர வீடுகளுக்கு செல்ல சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் அடிக்கடி கடந்த 05 வருடங்களாக இந்த அபாய நிலைக்கு தள்ளப்பட்டு குறித்த பாடசாலையில் தங்கியிருந்து மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இதுவரை காலமும் எந்த விதமான தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை எனவும், இந்த முறையாவது உரிய தீர்வு கிடைக்கவேண்டும் எனவும் இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: